Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏசி பயன்படுத்த புதிய விதிமுறை.. இனிமேல் 20°Cக்கு கீழ் குறைக்க முடியாது: மத்திய அமைச்சர்

Siva
புதன், 11 ஜூன் 2025 (07:59 IST)
ஏசி பயன்படுத்த புதிய விதிமுறை விதிக்கப்படுவதாகவும், இனிமேல் 20 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரைதான் ஏசியின் அளவை வைக்க முடியும் என்றும் மத்திய அமைச்சர் மனோகர்லால் கட்டார் தகவல் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
20 டிகிரி செல்சியஸ்க்கு கீழ் குறைக்கவோ அல்லது 28 டிகிரி செல்சியஸ்க்கு மேல் அதிகரிக்கவும் முடியாது என்றும், காலநிலை மாற்றம் மற்றும் அதிகரித்து வரும் வெப்பநிலையை கருதி இந்த முடிவு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வீடுகள், வணிக வளாகங்கள், வாகனங்களிலும் இதை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
இந்தியாவில் ஏசி பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வெப்ப அலை பிரச்சினைகள் அதிகரித்து வருவதாகவும், அதனால் அரசுக்கு புதிய வகை சவாலை ஏற்படுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
 
அதுமட்டுமின்றி, ஏசி பயன்பாடு அதிகரிப்பதால் கோடைகாலத்தில் மின்சார தேவையும் அதிகரித்திருப்பதாகவும், மின் தேவையில் ஐந்தில் ஒரு பங்கு ஏசிக்கு செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
 
எனவே, இனிமேல் ஏசி கருவிகளில் கூலிங் வெப்பநிலை குறைந்தபட்சம் 20°C அதிகபட்சம் 28°C  என்ற அளவில் மட்டுமே வைத்து ஏசியை உருவாக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டுத் தூத்துக்குடியில் மாட்டு வண்டிப் பந்தயம்!

சிறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டகேங்ஸ்டர் ரவுடி.. அதிர்ச்சியில் சிறை அதிகாரிகள்..!

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழ்நாட்டுக்கு கனமழையா?

அமைச்சர் ஐ பெரியசாமி வீட்டில் சோதனை எதிரொலி: தலைமை செயலகத்தில் பலத்த பாதுகாப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments