Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏடிஎம்-ல் முழுமையாக அச்சடிக்கப்படாத புதிய 500 ரூபாய் நோட்டுகள்

Advertiesment
ஏடிஎம்-ல் முழுமையாக அச்சடிக்கப்படாத புதிய 500 ரூபாய் நோட்டுகள்
, ஞாயிறு, 20 நவம்பர் 2016 (18:06 IST)
மும்பை ஏடிஎம்-ல் முழுமையாக அச்சடிக்கப்படாத புதிய 500 ரூபாய் நோட்டுகள் வந்ததாக புகார் எழுந்துள்ளது.


 

 
பழைய ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்புக்கு பின் 10 நாட்கள் கழித்துதான் புதிய 500 ரூபாய் விநியோகிக்கப்பட்டுள்ளது. அதுவும் இந்தியா முழுவதும் இன்னும் வெளிவரவில்லை. வடமாநிலங்களில் ஒரு சில இடங்களில் மட்டுமே 500 ரூபாய் நோட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது.
 
புதிய 2000 ரூபாய் நோட்டுக்கு சில்லரை தட்டுபாடு காரணமாக 100 ரூபாய் நோட்டுகளும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், மும்பையில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் ஒன்றில் முழுமையாக அச்சடிக்கப்படாத புதிய 500 ரூபாய் நோட்டுகள் கிடைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. 
 
அந்த ரூபாய் நோட்டுகளில் உள்ள மை பாதி அழிந்தநிலையில் இருப்பது போன்ற புகைப்படம் தற்போது சமூகவலைதங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அது கள்ள நோட்டாக இருக்கலாம் என்ற செய்தியும் பரவி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உயர் ரத்த அழுத்தம் பணக்காரர்களுக்கு மட்டுமான குறைபாடா?