பாகிஸ்தானுக்கு சென்று போரிலா ஜெயித்துவிட்டீர்கள்.. ஏன் இந்த கொண்டாட்டம்.. ஆர்சிபி ரசிகர்களுக்கு கண்டனம்.!

Siva
வியாழன், 5 ஜூன் 2025 (07:22 IST)
பெங்களூர் அணி ஐபிஎல் கோப்பையை வென்றதை அடுத்து, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வெற்றி கொண்டாட்டத்தில் நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான சம்பவத்திற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். சென்னை, மும்பை போன்ற அணிகள் ஐந்து முறை கோப்பைகளை வென்றுள்ளன. ஆனால், அவர்கள் வெற்றி கொண்டாட்டத்தை அமைதியாக நடத்தினர்.
 
ஒரே ஒரு கோப்பையை வாங்கிவிட்டு, ஏதோ பாகிஸ்தானுக்கு நாட்டுக்கு சென்று போரில் வெற்றி பெற்றது போன்று வெற்றியை பிரமாண்டமாக கொண்டாடியுள்ளனர். ஒரு ஐபிஎல் கோப்பையை வென்றதால் என்ன பெரிய நன்மை கிடைத்துவிடப்போகிறது? இதற்கு இவ்வளவு பெரிய கொண்டாட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் தேவையா?
 
இப்போது 11 பேர் பலியாகியுள்ளனர். இதற்கு யார் பொறுப்பேற்பார்கள்? அரசே இப்படி ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கக் கூடாது. பெங்களூர் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை மட்டும் வைத்து, சிம்பிளாக வெற்றியை கொண்டாடி இருக்கலாம்.
 
இவ்வளவு பிரமாண்டமான விழாவை கொண்டாடியதால்தான் அந்த நெரிசலுக்கு விலைமதிப்பில்லா 11 உயிர்கள் பலியாகினர் என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி மது விற்பனை ரூ.500 கோடியை தாண்டுமா? தயாராகிறது டாஸ்மாக்

பாகிஸ்தானில் இருந்து வந்த 200 ட்ரோன்கள் வழிமறிப்பு.. 287 கிலோ ஹெராயின் பறிமுதல்..!

சீனாவுக்காக அமெரிக்காவை உளவு பார்த்த இந்திய வம்சாவளி? - அமெரிக்காவில் அதிர்ச்சி கைது!

இப்படி எல்லாத்தையும் இழந்து நிக்கிறியே நண்பா! புதினுக்காக கண்ணீர் விட்ட ட்ரம்ப்!

ChatGPTல் 18+ கதைகளையும் இனி கேட்கலாம்: சாம் ஆல்ட்மேன் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments