3 குழந்தைகள் பெற்ற எம்பிக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: தேசியவாத காங்கிரஸ் பிரமுகர் பேச்சு..!

Webdunia
திங்கள், 24 ஏப்ரல் 2023 (20:52 IST)
மூன்று குழந்தைகள் மற்றும் அதற்கு மேல் குழந்தைகளை பெற்ற எம்பிக்களை பகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் அஜித் பவார் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜித் பவார் இந்தியாவின் மக்கள் தொகை 142 கோடியாக அதிகரித்துள்ளது கவலை அளிப்பதாகவும் இதற்கு நாமே பொறுப்பு என்றும் தெரிவித்தார்.

மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை கொண்டிருக்கும் எம்பி மற்றும் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் ஒரு குழந்தை மற்றும் இரண்டு குழந்தை பிறந்தவர்களுக்கு மட்டுமே அனைத்து பதவிகளையும் கொடுக்க வேண்டும் என்றும் பேசியுள்ளார்.

அவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்பது மட்டுமின்றி சமூக வலைதளங்களில் அவரது பேச்சுக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

16 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் ஆசிட் வீச்சு வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிர்ச்சி..!

புதினை நாங்கள் சந்திக்க கூடாதா? திட்டமிட்டு தவிர்க்கிறார்கள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

சென்னையில் மீண்டும் திடீர் மழை: நம்பி துணிகளைக் காயவைக்காதீர்கள்..! தமிழ்நாடு வெதர்மேன்..!

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்": திருமாவளவன் வலியுறுத்தல்

திருப்பரங்குன்றம் விவகாரம்: தீப தூண் கோயிலை விட பழமையானதா? நீதிபதிகள் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments