கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை மணிப்பூர் விவகாரம் குறித்து தமிழகம் முதல் அனைத்து அரசியல் தலைவர்களும் இடைவிடாமல் பேசிக் கொண்டிருந்த நிலையில் தற்போது ஏன் இது குறித்து பேசவில்லை என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
மணிப்பூர் விவகாரம் குறித்து பேசியதற்கு ஒரே ஒரு காரணம் பாராளுமன்றத்தை முடக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்றும் பாராளுமன்ற கூட்டம் முடிந்தவுடன் அந்த பிரச்சனையும் முடிந்து விட்டதாக அனைத்து அரசியல்வாதிகளும் கருதி விட்டதாகவும் நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு முறையும் பாராளுமன்றம் நடைபெறும் போது ஒவ்வொரு பிரச்சனையை எழுப்பி பாராளுமன்றத்தை முடக்குவது தான் எதிர்கட்சிகளின் வேலையாக இருக்கிறது என்றும் மணிப்பூர் பிரச்சனையின் மீது உண்மையிலேயே எதிர்க்கட்சிகளுக்கு அக்கறை இருந்தால் இப்போது ஒரு குழுவை அமைத்து மணிப்பூர் செல்லலாமே என்றும் பாராளுமன்றம் சுமூகமாக நடைபெறுவதே தடுப்பதற்காகவே மணிப்பூர் பிரச்சனையை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளதாகவும் நெட்டிசன்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
இதற்கு எதிர்கட்சி தலைவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்