Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.100-க்கு மேல ஒத்த பைசா கூட செல்லாது: அரசு கரார்!

Webdunia
திங்கள், 21 ஜனவரி 2019 (18:55 IST)
இந்திய அரசின் 2,000, 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை மக்கள் பயன்படுத்த நேபாள அரசு திடீர் தடை விதித்தது. இதனை இப்போது நேபாள மத்திய வங்கி உறுதிப்படுத்தி உள்ளது. ஆனால், 100 ரூபாய் நோட்டுகளை மட்டும் பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
 
கடந்த 2016 ஆம் ஆண்டு, மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அமல்படுத்திய போது நேபாளத்தில் கோடிக்கணக்கில் 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் தேங்கிவிட்டன. இதனை இதுவரை மத்திய அரசு நேபாள ரிசர்வ் வங்கியிடம் இருந்து திரும்ப பெறவில்லையாம்.  
 
இதனால், கடும் அதிருப்தியில் உள்ள நேபாள அரசு உயர்ந்த மதிப்புள்ள நோட்டுகளான ரூ.2000, ரூ.500 மற்ரும் ரூ.200-க்கு தடை விதித்து ரூ.100 மட்டும் பயன்படுத்தும்படி அறிவுறுத்தியுள்ளது. 
 
அரசு மற்றும் வங்கியின் இந்த அறிவிப்பால் நேபாளத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், வங்கிகள், சுற்றுலா பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகமாக உள்ளதாக தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

இன்றிரவு 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments