Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கிரிக்கெட் ஒரு விளையாட்டு மட்டுமல்ல, அது ஒரு மதம்: நீட்டா அம்பானி..!

Advertiesment
கிரிக்கெட் ஒரு விளையாட்டு மட்டுமல்ல, அது ஒரு மதம்: நீட்டா அம்பானி..!
, திங்கள், 16 அக்டோபர் 2023 (18:29 IST)
கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு, அதை மதமாக பார்க்க கூடாது என அனைத்து அரசியல்வாதிகளும் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் கிரிக்கெட் ஒரு விளையாட்டு மட்டுமல்ல அது ஒரு மதம் என பிரபல தொழிலதிபர்முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டா அம்பானி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சமீபத்தில் அகமதாபாத் மைதானத்தில் இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டியின் போது சில ரசிகர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கிரிக்கெட்டை ஒரு மதமாக பார்க்க கூடாது என்றும் அது ஒரு விளையாட்டு என்றும் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். 
 
இந்த நிலையில் பிரபல தொழில் அதிபர் முகேஷ் அன்பானியின் மனைவியும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினருமான நீட்டா அம்பானி கிரிக்கெட் உலக அளவில் அதிகம் நேசிக்கும் ஒரு விளையாட்டு என்றும் 140 கோடி இந்தியர்களுக்கு அது ஒரு விளையாட்டு மட்டுமல்ல அது ஒரு மதம் என்றும் தெரிவித்துள்ளார். அவரது கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாச்சாத்தி வழக்கு: மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு..!