Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் நுழைவுத்தேர்வு: விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு!

Webdunia
செவ்வாய், 31 டிசம்பர் 2019 (22:15 IST)
மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வான நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாம் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
இதுகுறித்து தேசிய தேர்வு முகமை விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு மே 3-ம் தேதி நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது.
 
நீட் நுழைவுத்தேர்வுக்கு கடந்த டிசம்பர் 2-ம் தேதி முதல் தேசிய தேர்வு முகமையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் மாணவ, மாணவியர் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடையவிருந்த நிலையில் தற்போது ஜனவரி 6 வரை அவகாசத்தை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 
 
இந்த கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு இல்லை என்பதால் நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவ, மாணவிகள் ஜனவரி 6ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 குழந்தைகள் உள்பட 7 பேர் கொலை.. பெண்ணுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்..!

பள்ளி மைதான ரெளடி போல் டிரம்ப் நடந்து கொள்கிறார்: சசிதரூர் விமர்சனம்..!

கமல்ஹாசனை அடுத்து பிரதமர் மோடியை சந்தித்த கனிமொழி.. தமிழக அரசியலில் பரபரப்பு..!

திரும்ப பெறப்படும் புதிய வருமானவரி மசோதா! மீண்டும் புதிய மசோதா! - மத்திய அரசு அதிர்ச்சி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments