இந்தியாவில் மருத்துவப் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் அனைவரும் கட்டாயமாக நீட் நுழைவுத் தேர்வு எழுதி, அதில் தேர்ச்சி பெற வேண்டுமென மத்திய அரசு அறிவித்தது. ஆரம்பத்தில் இதுகுறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தாலும், தற்போது மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர நீட் நுழைவுத் தேர்வுக்கு வருடம் தோறும் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் அடுத்த ஆண்டு நீட் தேர்வு ரத்தாகுமா என்று தமிழக மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இந்நிலையில், வரும் 2010 ஆம் ஆண்டு நீட் நுழைவுத் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.
இந்த நீட் நுழைவுத் தேர்வுக்காக, டிசம்பர் 31 ஆம் தேதி வரை, www.ntaneet.nic.in, www.nta.ac.in என்ற இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசின் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
ஒபிசி மற்றும் பொருளாதாரத்தில் பிற்படுத்தபட்டவர்கள்: ரூ.1400
எஸ்சி,எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் :ரூ.800 ஆகியவை தேர்வு கட்டணமாக விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது,மருத்துவப் படிப்பில் சேருவதற்காக வட மாநிலத்து மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகிறது.
கடந்த மக்களவைத் தேர்தலின் போது, மக்களிடம் தேர்தல் வாக்குறுதி கொடுத்த பல்வேறு தமிழக அரசியல் கட்சிகள்,நீட் தேர்வை ரத்து செய்ய முயற்சி மேற்கொள்வதாகக் கூறி வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர்.
நகர் புற மாணவர்களுக்கும், வசதி வாய்ப்புள்ள மாணவர்களுக்கும் எட்டும் இந்தப் நீட் தேர்வு மற்றபடி ஏழை எளிய மாணவர்களுக்கு கிட்டாதது போலவே பார்க்கப்படுகிறது.
அதனால், தமிழக குக்கிராமங்களில் உள்ள மாணவர்களுக்கு நீட் தேர்வும், அந்த தேர்வுக்கு தங்களை தயார் செய்யவற்கு மேற்கொள்ள வேண்டிய பயிற்சிகளும் எட்டாக் கனியாகவே உள்ளன என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அரசியல் வாதிகளின் முயற்சியால் தமிழகத்துக்கு மட்டும் நீட் தேர்வு ரத்தாகுமா...? இல்லை தற்போது தேர்வு முகமை வெளியிட்டுள்ளது போல் குறிப்பிட்ட தேதியில் நீட் தேர்வு நடக்குமா என்பது குறித்து தமிழக மாணவர்களிடம் கேள்வி எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.