Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் மல்லையா போல் என் கடனையும் தள்ளுபடி செய்யுங்கள் - துப்புரவு தொழிலாளர் கடிதம்

Advertiesment
விஜய் மல்லையா போல் என் கடனையும் தள்ளுபடி செய்யுங்கள் - துப்புரவு தொழிலாளர் கடிதம்
, ஞாயிறு, 20 நவம்பர் 2016 (12:58 IST)
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவின் கடனை தள்ளுபடி செய்தது போல், தன்னுடைய கடனையும் தள்ளுபடி செய்யுங்கள் என துப்புரவு தொழிலாளி ஒருவர் அவரின் வங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.


 

 
கிங் பிஷர் மதுபான ஆலை அதிபரான விஜய் மல்லையா, பொதுத்துறை வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடிக்கும் அதிகமான கடனை வாங்கி விட்டு, அதனை திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்து நாட்டிற்கு தப்பியோடி விட்டார். அவர், தேடப்படும் குற்றவாளி என்று பணமோசடி தடுப்பு நீதிமன்றமும் அண்மையில் அறிவித்தது.
 
இந்நிலையில், விஜய் மல்லையாவின் வராக்கடன் ரூ. 1201 கோடி உட்பட 63 பெருமுதலாளிகளின் வாராக்கடன் ரூ.7016 கோடியைசமீபத்தில்  தள்ளுபடி செய்தது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா.
 
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை காட்டியது. பாராளுமன்றத்தில் இதற்கு பதிலளித்த அருண் ஜெட்லி, கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. வாராக்கடனாக பதிவு செய்யப்பட்டும். அந்த பணத்தை விஜய் மல்லையாவிடம் இருந்து வசூலிக்க சட்ட ரீதியான நடவடிக்கை தொடரும் என தெரிவித்தார்.
 
இந்நிலையில்,  மராட்டிய மாநிலம், நாசிக் மாவட்டத்தை சேர்ந்த துப்புரவு தொழிலாளி பவ்ராவ் சோனாவானே என்பவர், அவர் கணக்கு வைத்திருக்கும் ஸ்டேட் வங்கி கிளையின் மேலாளருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். 
 
அந்த கடிதத்தில், விஜய் மல்லையாவின் கடனை தள்ளுபடி செய்தது போல், தன்னுடைய மகனின் சிகிச்சை செலவுக்காக, தான் வாங்கியுள்ள 1.5 லட்சம் கடனையும் தள்ளுபடி செய்து விடுங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
ஆனால், இந்த கடிதத்திற்கு வங்கி தரப்பில் இருந்து இன்னும் எந்த பதிலும் அனுப்பப்படவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வரலாற்று பதிவாக அதிக தொகைக்கு விற்கப்பட்ட சித்திரக்கதை