Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெ.விற்கு பின் நயன்தாராதான் ‘தலைவி’ - பாராட்டும் பிரபல பத்திரிக்கை

ஜெ.விற்கு பின் நயன்தாராதான் ‘தலைவி’ - பாராட்டும் பிரபல பத்திரிக்கை
, செவ்வாய், 14 நவம்பர் 2017 (14:01 IST)
நடிகை நயன்தாராவை தமிழ் ரசிகர்கள் ‘தலைவி’ என அழைக்கத் தொடங்கியுள்ளதாக பிரபல மலையாளப் பத்திரிக்கை மலையாள மனோரமா செய்தி வெளியிட்டுள்ளது.






 

 
 
நடிகை நயன்தாரா நடித்து சமீபத்தில் வெளியான அறம் படம் வெற்றி பெற்றதோடு, சிறந்த விமர்சனங்களையும் பெற்றுள்ளது. சமுதாய பிரச்சனைகளை கதைக்களமாக கொண்ட இப்படத்தில், மக்களுக்கு நன்மை செய்யும் கலெக்டர் வேடத்தில் நயன்தாரா நடித்துள்ளார். 
 

 
இந்நிலையில், மலையாளப் பத்திரிக்கை வெளியிட்டை செய்தியில் ‘ அறம் படத்திற்கு பின் தமிழ் சினிமா ரசிகர்கள் நயன்தாராவை ‘தலைவி’ என அழைக்கத் தொடங்கியுள்ளனர். ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் நயன்தாராவிற்குதான் அந்த பட்டம் கிடைத்துள்ளது. சென்னையில் நடந்த அறம் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நயன் வந்த போது அவரை   ‘எங்கள் தலைவி நயன்தாரா’ என கூச்சலிட்டனர்.
 
webdunia


 
சமீபகாலமாக நயன்தாரா சிறந்த கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதனால்தான், ஹீரோக்களை மட்டும் கொண்டாடும் தமிழ் சினிமா ரசிகர்கள் நயனை ‘தலைவி’ என அழைக்கத் தொடங்கியுள்ளனர். தமிழக அரசியலில் சினிமாத்துறையினரே வெற்றிக்கொடி நாட்டி, முதலமைச்சர் பதவியை அலங்கரித்து வருகின்றனர்” என செய்தி வெளியிட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களிலும் நயன்தாரா ரசிகர்கள் அவரை தலைவியாக சித்தரித்து மீம்ஸ்களை பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமெரிக்காவை எந்த நேரத்திலும் தாக்குவோம்; ரஷ்யாவுக்கு கடிதம் அனுப்பிய வடகொரியா