சென்னைக்கு வந்து கொண்டிருந்த ரயிலில் திடீர் தீ விபத்து: பயணிகள் அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 18 நவம்பர் 2022 (07:36 IST)
சென்னைக்கு வந்து கொண்டிருந்த ரயிலில் திடீர் தீ விபத்து: பயணிகள் அதிர்ச்சி
சென்னைக்கு வந்து கொண்டிருந்த ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
அகமதாபாத் என்ற நகரில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது
 
இதனையடுத்து உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டதாகவும், தீயணைப்பு துறையினர்களுக்கு தகவல் தரப்பட்டதாகவும் தெரிகிறது.
 
திருப்பதி மாவட்டத்தில்  நிறுத்தப்பட்ட ரயிலில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு துறையினர் உடனடியாக அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் கழித்து தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது என்றும் அதன் பின்னரே ரயில் கிளம்பியதாகவும் கூறப்படுகிறது
 
இந்த தீவிபத்தில் பயணிகளுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்த ரயில்வே துறை உத்தரவிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மாலை 22 மாவட்டங்களில் மழை கொட்டும்: வானிலை ஆய்வு மையம் தகவல்...!

25 குழந்தைகள் மரணத்திற்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம்: இருமல் மருந்து விவகாரம் குறித்து ஈபிஎஸ்..!

கோல்ட்ரிப் மருந்து விவகாரம்! மத்திய அரசீன் அலட்சியமே காரணம்! - மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு!

ஆரம்பமே 42% கூடுதல் மழை.. இன்னும் அதிகரிக்கும் மழை! - வானிலை ஆய்வு மையம்!

முதல்முறையாக நேருக்கு நேர் சந்திக்கும் ஜெலன்ஸ்கி - புதின்? - ட்ரம்பின் அடுத்த போர்நிறுத்த வியூகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments