Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு ஆண்டில் ரூ.1,912 கோடி வசூல்; முதலிடத்தில் பாஜக! – கட்சிகளின் நிதி வசூல் விவரம்!

Webdunia
வியாழன், 2 மார்ச் 2023 (10:31 IST)
இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய அரசியல் கட்சிகள் கடந்த ஒரு ஆண்டில் நிதியாக வசூலித்த தொகை குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் 8 கட்சிகள் தேசிய கட்சிகளாக இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பா.ஜ.க, காங்கிரஸ், பகுஜன்சமாஜ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் கட்சி ஆகிய இந்த 8 தேசிய கட்சிகளும் ஆண்டுதோறும் தங்கள் நிதி வசூல் மற்றும் வருமானம் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும்.

அவ்வாறாக 2021 – 2022ம் ஆண்டில் தேசிய கட்சிகள் பெற்ற வருமானம் மொத்தமாக ரூ.3,289.34 கோடி ஆகும். இதில் மத்தியில் ஆளும் பா.ஜ.க கட்சி மட்டும் ரூ.1917.12 கோடி ஈட்டியுள்ளது. இந்த தொகையில் இருந்து ரூ.854.46 கோடியை செலவு செய்துள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது. ஒரு ஆண்டில் அதிகம் நிதி சேகரித்த கட்சியில் முதல் இடத்தில் பாஜக உள்ளது.

இரண்டாவதாக காங்கிரஸ் கட்சி ரூ.541.27 கோடி வருமானம் பெற்றும் அதில் ரூ.400.41 கோடியை செலவு செய்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் ரூ.545.74 கோடி வருமானம் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments