Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைனில் தேசிய கொடி வாங்கலாம்.. விலை ரூ.25 தான்.. முழு விவரம்..!

Mahendran
புதன், 14 ஆகஸ்ட் 2024 (15:27 IST)
இந்தியாவின் 78வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் சுதந்திர தினத்தை கொண்டாடுபவர்கள், தேசியக்கொடி ஏற்ற விரும்புபவர்கள் தேசியக்கொடியை ஆன்லைனில் வாங்கலாம் என்றும் ஆன்லைன் தேசிய கொடியின் விலை 25 ரூபாய் தான் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசியக்கொடியை ஆன்லைனில் வாங்குவது எப்படி என்பதை தற்போது பார்க்கலாம்

 இந்தியா போஸ்ட் இணையதளத்தில் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கொடிகள் விற்பனை செய்யப்படுகிறது.  இந்திய தபால்களில் இந்திய மூவர்ணக் கொடி விலை  25 ரூபாய்க்கு கிடைக்கிறது. வர்ணக் கொடி வாங்குவதற்கு நீங்கள் இந்தியா போஸ்டில் பதிவு செய்ய வேண்டும். கொடியை முதலில் தேர்வு செய்து அதனை வாங்கலாம். யுபிஐ அல்லது நெட்பேங்கிங் மூலம் ரூ.25 செலுத்தி பெற்று கொள்ளலாம்.

முன்னதாக பிரதமர் மோடி தனது சமூக வலைத்தள பக்கத்தில் 'ஹர் கர் திரங்கா' பிரச்சாரத்தை வெற்றியடையச் செய்யுமாறு ஒவ்வொரு குடிமகனையும் வலியுறுத்துகிறேன், மக்கள் தங்கள் டிபிகளை இந்தியாவின் தேசியக் கொடியாக மாற்றி, தங்கள் வீடுகளில் மூவர்ணக் கொடியை ஏற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளதால் ஏராளமானோர் ஆன்லைனில் தேசிய கொடியை வாங்கி வருகின்றனர்.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் விபத்திற்கு கடலூர் கலெக்டர் தான் காரணமா? தெற்கு ரயில்வே அதிகாரி அறிக்கையால் பரபரப்பு..!

கேட் திறந்திருந்ததா? மூடப்பட்டு இருந்ததா? வேன் டிரைவர், ரயில்வே நிர்வாகத்தின் முரண்பாடான தகவல்கள்..!

ஏற்காடு எக்ஸ்பிரஸை கடத்த போறேன்.. முடிஞ்சா புடிங்க! - போலீஸை அலறவிட்ட இளைஞர்!

என் தலைவிதியை ஏன் இப்படி எழுதினாய்? சிவபெருமானுக்கு கடிதம் எழுதி இளைஞர் தற்கொலை..!

ரகசிய கேமராவுடன் ஸ்மார்ட் கண்ணாடி அணிந்து சென்ற பக்தர்.. திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் கைது!

அடுத்த கட்டுரையில்
Show comments