Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜி 20 மாநாட்டிற்காக சுவாமி மலையில் இருந்து சென்ற 28 அடி உயர நடராஜர் சிலை!

Advertiesment
ஜி 20 மாநாட்டிற்காக சுவாமி மலையில் இருந்து சென்ற 28 அடி உயர நடராஜர் சிலை!
, புதன், 6 செப்டம்பர் 2023 (07:06 IST)
அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் உறுப்பினர்களாக உள்ள அமைப்பு ஜி20. இதன் உச்சி மாநாடு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டில் நடைபெறும் நிலையில் இந்த ஆண்டு இந்தியாவின் தலைநகர் டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடக்கிறது.

இந்த மாநாடு நடக்கும் பிரகதி மைதானத்தின் முகப்பு பகுதியில் நடராஜர் சிலை ஒன்றை வைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீ தேவசேனாதிபதி சிற்பக்கூடத்துக்கு பிரம்மாண்டமான நடராஜர் சிலை செய்யும் பணி வழங்கப்பட்டது.

28 அடி உயரம், 21 அடி அகலம், 18 டன் எடையில் செம்பு, பித்தளை, இரும்பு, ஈயம், தங்கம், வெள்ளி, வெள்ளீயம், பாதரசம் ஆகிய உலோகங்களின் கலவையில் பிரம்மாண்டமான சிலை செய்து முடிக்கப்பட்டது. இதையடுத்து இந்த சிலை டெல்லிக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு மாநாடு முகப்பில் நிறுவப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோடநாடு வழக்கில் முன்னாள் அமைச்சர்களை விசாரிக்க வேண்டும்… ஓட்டுனர் கனகராஜின் சகோதரர் தனபால்!