Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாஜக-வில் சேர ரூ.1 கோடிக்கு பேரம்: உண்மையை போட்டுடைத்த நரேந்திர பட்டேல்!!

Advertiesment
பாஜக-வில் சேர ரூ.1 கோடிக்கு பேரம்: உண்மையை போட்டுடைத்த நரேந்திர பட்டேல்!!
, திங்கள், 23 அக்டோபர் 2017 (17:12 IST)
குஜராத் சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால், அங்கு உள்ள செல்வாக்கான நபர்களை தங்களது பக்கம் இழுக்க பாஜக கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. 


 
 
இந்நிலையில், பாஜக கட்சியில் இணைய ரூ.1 கோடி பேரம் பேசப்பட்டதாவும், இந்த பேரத்திற்கு முன்பணமாக ரூ10 லட்சம் தரப்பட்டதாவும் நரேந்திர பட்டேல் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளர். 
 
குஜராத்தில் உள்ள பட்டேல் சமூக தலைவர்களில் ஒருவர்தான் நரேந்திர பட்டேல். இந்த தேர்தலில் பட்டேல் சமுகத்தினரின் ஆதிக்கம் அதிக அளவில் இருக்கும் என்றே கூறப்படுகிறது.
  
இந்த தேர்தலில் பட்டேல் சமூகத்தினர் காங்கிரஸுக்கு ஆதரவளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பட்டேல் சமுகத்தினை சேர்ந்த முக்கிய தலைவர்களை தன் பக்கம் இழுக்க முயற்சித்து வருகின்றனர்.
 
தற்போது, பாஜகவில் சேருவதற்கு தமக்கு ரூ.1 கோடி பேரம் பேசப்பட்டதாகவும் அட்வான்ஸாக ரூ10 லட்சம் தரப்பட்டதாகவும் நரேந்திர பட்டேல் குற்றம்சாட்டியுள்ளார். அத்துடன் கொடுக்கப்பட்ட பணத்தையும் செய்தியாளர்களிடம் நரேந்திர பட்டேல் காண்பித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஷால் அலுவலகத்தில் ஜி.எஸ்.டி சோதனை - அடுத்து விஜய்?