புதுச்சேரியில் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று பதவியில் அமர்ந்தது. ஆனால் பதவியில் அமர்ந்தது முதல் இன்று வரை ஒருநாள் கூட நிம்மதியாக முதல்வர் நாராயணசாமி அவர்களால் ஆட்சி நடத்த முடியவில்லை
இதுவரை இல்லாத வகையில் புதுச்சேரி துணைநிலை ஆளுனர் கிரண்பேடி அரசுக்கு குடைச்சல் கொடுத்து கொண்டே இருக்கின்றார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் நடவடிக்கைகளுக்கு அவர் தடை போட்டு வருகிறார். கிரண்பேடி தனது அதிகாரங்களை மீறி செயல்படுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் கூட்டம் ஒன்றில் பேசிய முதல்வர் நாராயணசாமி, 'அமெரிக்க அதிபர் பதவியை விட புதுவை முதல்வர் பதவியில் நீடிப்பது கஷ்டம் என்று ஆதங்கத்துடன் பேசினார். பாஜக ஆளாத மாநிலங்களில் கவர்னர் மூலம் அரசுக்கு குடைச்சல் கொடுப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன'