கர்நாடக மாநில புதிய பாஜக தலைவர் நியமனம்: அமித்ஷா அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (20:57 IST)
கர்நாடக மாநில பாஜக தலைவராக இருந்த எடியூரப்பா கடந்த மாதம் அம்மாநிலத்தின் முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டதை அடுத்து அம்மாநிலத்திற்கு புதிய பாஜக தலைவர் நியமனம் செய்யப்படுவார் என்ற செய்தி கடந்த சில நாட்களாக வெளிவந்து கொண்டிருந்தது
 
இந்த நிலையில் பாஜக தேசிய தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, கர்நாடக மாநிலத்தின் புதிய பாஜக தலைவராக நளின் குமார் காடீல் என்பவரை நியமனம் செய்துள்ளார். இதனையடுத்து இன்று முதல் கர்நாடக மாநிலத்தின் புதிய பாஜக தலைவராக நளின் குமார் காடீல் செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
நளின் குமார் காடீல் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் மூன்று முறை கர்நாடகா மாநிலத்தில் உள்ள தக்சினா என்ற தொகுதியில் இருந்து எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments