Publish Date: Mon, 27 Feb 2017 (12:13 IST)
Updated Date: Mon, 27 Feb 2017 (12:16 IST)
பறக்கும் விமானத்தில் பணிப்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஆகாஷ் குப்தா(23) என்ற தொழிலதிபர் கடந்த 25ம் தேதி நாக்பூரில் இருந்து மும்பைக்கு சென்றுள்ளார். அப்போது அவர் மது போதையில் இருந்ததாக தெரிகிறது.
அந்நிலையில், விமானத்தில் இருந்த பணிப்பெண்கள் 2 பேரின் கையை பிடித்து இழுத்து அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து, அந்த பணிப்பெண்கள் இருவரும் கடிதம் மூலம் விமானத்தின் கேப்டனுக்கு புகார் தெரிவித்தனர். அவர் உடனடியாக மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையினருக்கு தகவல் அளித்தார்.
அவர்கள் இந்த புகாரை நாக்பூரில் உள்ள சோனெகான் காவல் துறையினருக்கு அனுப்பி வைத்தார். அவர்கள் விரைந்து சென்று, ஆகாஷ் குப்தாவை கைது செய்தனர். அதன்பின், அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.