வட இந்திய மாநிலங்களில் நேற்று இரவு வானில் ஒளிபோன்ற மர்ம பொருள் சென்றதை கண்டு மக்கள் அச்சமடைந்தனர்.
ஜம்முவில் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டையை ஒட்டிய ரஜோரி, பூஞ்ச், சம்பா, அக்னூர் மாவட்டங்களிலும் பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களிலும் நேற்று மாலை சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் அதிக வெளிச்சத்துடன் கூடிய மர்ம பொருள் வானில் சென்றது. இதனை கண்டு மக்கள் அச்சமடைந்தனர்.
5 நிமிடம் வரை நீடித்த இந்த காட்சியை பலர் படம்பிடித்து இணையத்தில் பதிவிட்டதால் இவை சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனைத்தொடர்ந்து அது ஒரு செயற்கைக்கோள் என்பதை பாதுகாப்புத்துறை உறுதிப்படுத்தி உள்ளது. மேலும் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.