மிந்த்ரா நிறுவனத்தின் லோகோ பெண்களை இழிவுபடுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்ததை அடுத்து அதை நீக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த ஆன்லைன் விற்பனை நிலையமான மிந்த்ரா குறிப்பிடத்தகுந்த சந்தையை தங்கள் கைவசம் வைத்துள்ளது. இந்நிலையில் அந்த நிறுவனத்தின் லோகோ பெண்களை இழிவுப்படுத்தும் விதமாக இருப்பதாக மும்பையில் இயங்கி வரும் அவஸ்டா பவுண்டேசனை சேர்ந்த நாஸ் பட்டேல் லோகோவை மாற்ற வேண்டும் என்று மும்பை சைபர் குற்றப்பிரிவில் இந்த புகாரை அளித்திருந்தார்.
இது சம்மந்தமாக மிந்த்ரா நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்பட்ட நிலையில் தங்கள் லோகோவை மாற்ற அவர்கள் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.