”எனது இரண்டாவது இன்னிங்ஸ் திருப்திகரமாக உள்ளது” - சச்சின் டெண்டுல்கர்

திங்கள், 29 டிசம்பர் 2014 (11:43 IST)
எனது இரண்டாவது இன்னிங்ஸ் எதிர்பாத்ததைவிட திருப்திகரமாக உள்ளது என முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
 
இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ”எனது இரண்டாவது இன்னிங்ஸ் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக உள்ளது. பல கிராமங்களுக்கு மின்சார வசதி கிடையாது. சூரியன் மறைவிற்கு பிறகு அவர்களுடைய வாழ்க்கை செயலற்றுவிடுகிறது. இந்த ஒரு விஷயத்தை நான் மாற்ற விரும்புகிறேன்.
 
இதை சரிசெய்ய வேண்டுமென்றால் அதற்கு நிறைய பேரின் ஆதரவு தேவை. ஒவ்வொருவரின் ஆதரவையும் பெறமுடியும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று அவர் கூறினார்.
 
அதிக உலகக் கோப்பையில் விளையாடியுள்ள சச்சின் வரும் 2015 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள போட்டி குறித்து கூறுகையில், “நான் விளையாடாத போது, பயிற்சியளிக்க விரும்பவில்லை. ஆனால் நான் கவனித்துக் கொண்டிருப்பேன். நமக்கு சிறந்த சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாக உறுதியாக நான் நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்