Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேறியது முத்தலாக் தடுப்பு மசோதா

கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேறியது முத்தலாக் தடுப்பு மசோதா
, வியாழன், 25 ஜூலை 2019 (19:07 IST)
கடும் எதிர்ப்புகளுக்கு இடையே மக்களவையில் முத்தலாக் தடுப்பு மசோதா நிறைவேறியது. முத்தலாக் மசோதா மக்களவையில் வாக்கெடுப்பு மூலம் சற்றுமுன் நிறைவேற்றப்பட்டது. இந்த  மசோதாவிற்கு ஆதரவாக 303 வாக்குகளும், எதிராக 82 வாக்குகள் பதிவு ஆனதால் முத்தலாக் மசோதா வெற்றிகரமாக மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவின்படி முத்தலாக் மூலம் மனைவியை விவாகரத்து செய்பவர்கள் மூன்று ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்க இந்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது
 
முத்தலாக் தடுப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்ததால் மக்களவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மசோதா குறித்து திமுக எம்பி கனிமொழி பேசியபோது, 'நாட்டில் உள்ள இஸ்லாமிய மக்கள் பாதுகாப்பற்றவர்களாக உணர வைக்க திமுக அனுமதிக்காது  என்றும், மத்திய அரசின் முத்தலாக் மசோதா குறிப்பிட்ட மதத்திற்கும், சமுதாயத்திற்கும் எதிரானது என்றும் கூறினார். மேலும் இஸ்லாமிய பெண்களின் உரிமையை பற்றி மட்டுமே அரசு கவலைப்படுவது ஏன்? என்ற கேள்வி எழுப்பியை கனிமொழி, 'நாட்டில் உள்ள இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்களின் உரிமை குறித்து ஏன் அரசு அக்கறை கொள்ளவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
 
அதே நேரத்தில் முத்தலாக் தடுப்பு மசோதாவுக்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளது. அதிமுகவின் ஒரே மக்களவை எம்பி ரவீந்திரநாத் குமார்  இதுகுறித்து பேசியபோது, 'பெண்கள் உரிமையை பாதுகாக்கும் நடவடிக்கை என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வருகிறது சாம்சங் ஃபோல்ட் – விலையை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க