Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹோலி கொண்டாடும்போது இஸ்லாமியர்கள் வெளியே வர வேண்டாம்! - உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்!

Prasanth Karthick
செவ்வாய், 11 மார்ச் 2025 (09:11 IST)

இந்தியா முழுவதும் பல பகுதிகளில் ஹோலி பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் அன்று முஸ்லீம்கள் வெளியே வர வேண்டாம் என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தியாவின் வடமாநிலங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் மார்ச் 14ம் தேதி வெள்ளிக்கிழமையன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. வெள்ளிக்கிழமையில் ஹோலி வரும் நிலையில் அதே நாளில் இஸ்லாமியர்களும் தொழுகைக்கு செல்வார்கள் என்பதால் இரு தரப்புக்கும் இடையே மோதல் எழாமல் இருக்க இஸ்லாமியர்கள் அன்று வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என சம்பல் மாவட்ட காவல்துறை கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

 

அதை ஆதரித்து பேசியுள்ள உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இஸ்லாமியர்கள் ஆண்டின் 52 வெள்ளிக்கிழமையும் தொழுகை செய்கிறார்கள். ஆனால் ஹோலி பண்டிகை ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே வருகிறது. அதனால் இஸ்லாமியர்கள் அன்று தொழுகை செய்ய மசூதிகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஹோலி வண்ணங்களை அசௌகரியமாக நினைப்பவர்கள் வீட்டிலேயே இருந்து விடுங்கள்” என பேசியுள்ளார்

 

ஏற்கனவே கும்பமேளா சமயத்தில் யோகி ஆதித்யநாத் இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசியிருந்த நிலையில், தற்போது ஹோலி கொண்டாடும் நேரத்தில் அவர்களை வீடுகளில் இருக்க சொல்வது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments