17 வயது சிறுமியிடம் பேசிய முஸ்லீம் இளைஞர் அடித்து கொலை.. 8 பேர் கைது

Siva
வியாழன், 14 ஆகஸ்ட் 2025 (12:54 IST)
மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில், 17 வயது சிறுமியுடன் காபி கடையில் பேசிக்கொண்டிருந்த 21 வயது முஸ்லிம் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
சலீம் ரஹீம் கான் என்ற அந்த இளைஞர், இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு காபி கடையில் சிறுமியுடன் பேசிக் கொண்டிருந்தபோது, ஒரு கும்பலால் அந்த இளைஞரை மிரட்டியது. இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பிறகு, அந்த கும்பல் சலீம் மற்றும் அந்த பெண்ணை பின்தொடர்ந்து சென்று, வேறு ஒரு இடத்தில் மீண்டும் கொடூரமாக தாக்கியது.
 
இந்த தாக்குதலின் போது, சலீமிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது பெற்றோர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.  
 
கொலைக்கான சரியான நோக்கம் இன்னும் முழுமையாக தெரியவில்லை என்றாலும், காவல்துறை இந்த வழக்கில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஆறு குற்றவாளிகள் இன்னும் தலைமறைவாக உள்ளதாகவும், அவர்களை தேடிப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!..

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments