Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செண்டை மேளத்தில் ”முக்காலா முக்காபுலா”.. கால்களை தானாக நடனமாட செய்யும் வைரல் வீடியோ

Advertiesment
செண்டை மேளத்தில் ”முக்காலா முக்காபுலா”.. கால்களை தானாக நடனமாட செய்யும் வைரல் வீடியோ

Arun Prasath

, செவ்வாய், 12 நவம்பர் 2019 (13:43 IST)
காதலன் திரைப்படத்தில் இடம்பெற்ற ”முக்காலா முக்காபுலா” பாடலை கேரளத்தை சேர்ந்த இசைக்குழுவினர் செண்டா மேளத்துடன் பேண்ட் வாத்தியத்தோடு இசைத்த வீடியோ கேட்பவர்களை பரவசப்படுத்தி வருகிறது.

பிரபு தேவா, நக்மா ஆகியோரின் நடிப்பில் வெளியான “காதலன்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முக்காலா முக்காபுலா” என்ற பாடல் தமிழகத்தில் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. அந்த பாடல் தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகமெங்கும் உள்ள ரசிகர்களால் அதிகளவில் விரும்பி கேட்கப்பட்டது. இந்த பாடலை இசையமைத்தவர் இசைப்புயல் என போற்றப்படும் ஏ.ஆர்.ரகுமான்.

இந்த நிலையில் கேரள மாநிலத்தின் சிறப்பான செண்டை மேளத்துடன், பேண்ட் வாத்தியங்களோடு இசைக் குழுவினர் “முக்காலா முக்காபுலா” பாடலை இசையமைத்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பிரபல பாடகி சுஜாதாவின் மகள் ஸ்வேதா மோகன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ பார்ப்பவர்களை பரவசமூட்டி வருகிறது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹ்ரித்திக் ரோஷன் படம் பார்த்த மனைவி கொலை: அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்!