Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மும்பையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் டிராபிக்.. மெட்ரோவில் பயணம் செய்யும் பாலிவுட் நடிகைகள்..!

மும்பையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் டிராபிக்.. மெட்ரோவில் பயணம் செய்யும் பாலிவுட் நடிகைகள்..!
, புதன், 12 ஏப்ரல் 2023 (15:56 IST)
மும்பையில் நாளுக்கு நாள் டிராபிக் அதிகரித்து வருவதை அடுத்து பாலிவுட் நடிகைகள் பல தற்போது மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
சென்னை உள்பட பெரு நகரங்களில் மெட்ரோ ரயில் வசதி இருப்பதை எடுத்து டிராபிக் பிரச்சனை இல்லாமல் குறித்த நேரத்தில் குறித்த இடத்திற்கு செல்லும் வசதி உள்ளது. இந்த மெட்ரோ ரயிலில் நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது பணக்காரர்களும் அதிகம் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். 
 
குறிப்பாக சென்னை கோயம்பேடு அல்லது சென்ட்ரலில் இருந்து விமான நிலையத்திற்கு காரில் சென்றால் ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை ட்ராபிக் பிரச்சனை காரணமாக ஆகிறது. ஆனால் மெட்ரோ ரயிலில் சென்றால் 30 நிமிடத்தில் சென்றுவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதேபோல் மும்பையில் மிகப்பெரிய அளவில் தற்போது டிராபிக் பிரச்சனை இருப்பதை எடுத்து அங்கு திரையுலக பிரபலங்கள் உட்பட பலரும் மெட்ரோ ரயிலை பயன்படுத்தி வருகின்றனர். படப்பிடிப்பு தளத்திலிருந்து மெட்ரோ ரயில் பயணம் செய்து அங்கிருந்து ஆட்டோவில் தனது வீட்டிற்கு செல்வதாக பிரபல நடிகை ஹேமாலினி தெரிவித்துள்ளார். சமீபத்தில் சாரா அலிகான் மும்பையில் டிராபிக்கில் சிக்கிக் கொண்டதை அடுத்து காரில் இருந்து இறங்கி மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சந்தா செலுத்தாத கணக்குகளின் ப்ளூடிக் அகற்றப்படும்: கெடு தேதி அறிவித்த எலான் மஸ்க்..!