Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

828 புள்ளிகள் உயர்ந்தது சென்செக்ஸ்: மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!

Advertiesment
பங்குச்சந்தை
, திங்கள், 14 மார்ச் 2022 (14:48 IST)
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் காலையில் 400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த நிலையில் தற்போது 800 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
கடந்த சில நாட்களாக மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் கடும் வீழ்ச்சி அடைந்த நிலையில் முதலீட்டாளர்கள் கோடிக்கணக்கில் பணத்தை இழந்தனர்.
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் பங்குச்சந்தை நிமிர்ந்து வருகிறது, குறிப்பாக இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 828 புள்ளிகள் உயர்ந்து, 56,379 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி, 214 புள்ளிகள் அதிகரித்து, 16,845 புள்ளிகளாக உள்ளது!
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் இயல்பைவிட வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்!