Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராணுவ வீரர் என்று கூறி மும்பை நபரிடம் ரூ.2 கோடி மோசடி : பேஸ்புக் நட்பால் விபரீதம்

ராணுவ வீரர் என்று கூறி மும்பை நபரிடம் ரூ.2 கோடி மோசடி : பேஸ்புக் நட்பால் விபரீதம்
, வியாழன், 9 ஜூன் 2016 (13:46 IST)
பேஸ்புக்கில் பழக்கமான ஒருவரிடம் மும்பையை சேர்ந்த ஒரு முதியவர் ரூ.2 கோடி வரை ஏமாந்து நிற்கிறார்.


 

 
சமூகவலைத்தளங்களான பேஸ்புக் மற்றும் டிவிட்டர் ஆகியவற்றின் மூலம், பலரது நட்புகளை பெறமுடியும்.  தகவல்களை பறிமாறிகொள்ள பயன்படுத்த வேண்டிய அவற்றை, சிலர் மோசடி செய்யவும் பயன்படுத்துகின்றனர். இதில் சிக்கி பலர் தங்கள் பணங்களை இழந்துள்ளனர். 
 
பேஸ்புக்கில் அறிமுகான ஒருவரை நம்பி மும்பையை சேர்ந்த முதியவர் ஒருவர் ரூ.2 கோடி ஏமாந்து நிற்கிறார்.
 
மேற்கு மும்பையில் உள்ள பந்த்ரா பகுதியில் வசிப்பவர் வினோத் குமார் குவாலேவாலா(72). அவர் நாஷிக்கில் ஆட்டோமொபைல் உதிரிப்பாகம் தயாரிக்கும் தொழிற்சாலை வைத்துள்ளார். அவருக்கு பேஸ்புக்கில் ஒருவர் அறிமுகமானார். நீண்ட நாட்கள் அவர்கள் பேஸ்புக் மூலம் நட்பை வளர்த்து வந்துள்ளனர்.
 
அப்போது அந்த நபர், தான் அமெரிக்க ராணுவத்தில் வேலை செய்வதாகவும் கூறியுள்ளார். மேலும், இந்தியாவில் தொழில் தொடங்க முதலீடு செய்ய உள்ளதாகவும், ஆனால் நம்பிக்கையான நபர் கிடைக்கவில்லை. நீங்கள் என்னுடன் பிசினஸ் பார்ட்னராக விரும்பினால்., ரூ. 5 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் சுமார். ரூ.3.32 கோடி) முதலீடு செய்கிறேன் என்று கூறியுள்ளார். இதற்கு வினோத் குமாரும் சம்மதம் தெரிவித்துள்ளார். 
 
மேலும், போலியான சான்றிதழ்களையும் அவர் அனுப்பி வைத்துள்ளார். மேலும், வினோத்குமாரிடம் வங்கி நிர்வாகி ஒருவரும் இதுபற்றி பேசியுள்ளார். எனவே, உறுதியாக நம்பிய அவர், மும்பையில் உள்ள பல்வேறு வங்கிகளில் கணக்கை தொடங்கி பணம் டெபாசிட் செய்துள்ளார். அந்த அமெரிக்க நபரும் அதில் பணம் எடுக்கும் வகையில் கணக்குகள் தொடங்கப்பட்டிருந்தது.
 
சிலநாள் கழித்து வினோத்குமார் வங்கிக்கு சென்று பணம் எடுக்க முயன்றார். ஆனால் அந்த கணக்கில் பணம் இல்லை. மேலும், அவரிடம் வைத்திருந்த எல்லா தொடர்புகளையும் அந்த அமெரிக்க நபர் துண்டித்தார். அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டுள்ளது வினோத்குமாருக்கு தெரிய வந்துள்ளது. 
 
ரூ.2 கோடி வரை இழந்து நிற்கும் வினோத்குமார், தற்போது போலீசாரிடம் புகார் செய்துள்ளார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ. 570 கோடி விவகாரம் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? - சிபிஐக்கு நோட்டீஸ்