Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முத்தம் கொடுத்த போட்டோ! சிறுமியை மிரட்டி வன்கொடுமை! – மும்பையில் அதிர்ச்சி!

abuse
, திங்கள், 12 டிசம்பர் 2022 (10:07 IST)
மும்பையில் சிறுமிக்கு முத்தம் கொடுத்ததை போட்டோ எடுத்து மிரட்டி வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையை சேர்ந்த 17 வயது சிறுவனும், சிறுமியும் சமீப காலமாக பழகி வந்துள்ளனர். சமீபத்தில் ஒரு பிறந்தநாள் பார்ட்டி ஒன்றில் இருவரும் கலந்து கொண்ட நிலையில் அங்கு சிறுமிக்கு முத்தம் கொடுத்து, அதை தனது போனில் படம் பிடித்துள்ளான் அந்த சிறுவன்.

பின்னர் அதை வெளியிட்டு விடுவேன் என கூறி அந்த சிறுமியை தனியே வர சொல்லி அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று அவர் அவ்வாறு அழைத்தபோது சிறுமி அவருக்கு இணங்க மறுத்ததால் சிறுமியை அந்த சிறுவன் தாக்கியுள்ளான்.

இதை கண்ட சிறுமியின் நண்பர், சிறுமியின் பெற்றோர்களிடம் சொல்லியுள்ளார். இதுகுறித்து விசாரித்தபோதுதான் சிறுமியின் பெற்றோருக்கு உண்மை தெரிய வந்துள்ளது. இதுகுறித்து காவல் நிலையத்தில் அவர்கள் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Edited by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னை விலை நிலவரம்!