மும்பையை மூழ்கடித்த மழை – வெளியேறிய மக்கள்

Webdunia
செவ்வாய், 2 ஜூலை 2019 (16:31 IST)
கடந்த இரண்டு வாரங்களாக மும்பையில் பெய்து வரும் கனமழையால் நகரமே மழைவெள்ளத்தில் மூழ்கியுள்ளது. மக்கள் பலர் பலவிதமான இயற்கை விபத்துகளால் உயிரிழந்து வருகின்றனர்.

மும்பையில் பெய்து வரும் கனமழையால் இறந்தோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில தினங்களில் கொட்டி தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. வீதிகளில் பாய்ந்த வெள்ளம் அங்கு நின்ற வாகனங்களை அள்ளிப்போட்டு கொண்டு சுரங்கபாதையில் சென்று நிரம்பிவிட்டது. மீட்பு பணிகளில் தீயணைப்பு துறை, காவல் துறை, சமூக ஆர்வலர்கள் என பலர் பங்கெடுத்துள்ளனர். இன்று காலை புனேவில் மழை காரணமாக கல்லூரி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 18 பேர் பலியாகி இருக்கின்றனர். மேலும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு மகாராஷ்டிர அரசு அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டர் வீட்டில் திடீர் ரெய்ட்.. கஞ்சா உள்பட ரூ.3 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்..!

காபி ரூ.700, தண்ணீர் பாட்டில் ரூ.100.. இப்படி விலை வைத்தால் தியேட்டர்கள் மூடப்படும்: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

குருநானக் கொண்டாட்டத்தில் பங்கேற்க இந்தியர்களுக்கு மறுப்பு: பாகிஸ்தான் அடாவடி..!

ஒரே நபர் மீண்டும் மீண்டும் வாக்களித்தபோது, முகவர்கள் ஏன் ஆட்சேபிக்கவில்லை? ராகுல் காந்திக்கு கேள்வி

ஓட்டுனர் உரிமத்துடன் செல்போன் எண்ணை இணைக்க வேண்டும்.. இணைக்காவிட்டால் என்ன ஆகும்?

அடுத்த கட்டுரையில்
Show comments