எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பயனில்லை.. டிஜிட்டல் அரேஸ்ட்டில் ரூ.50 லட்சம் ஏமாந்த முதிய தம்பதி..!

Siva
வியாழன், 30 அக்டோபர் 2025 (08:31 IST)
மும்பையில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி ஒருவரையும் அவரது மனைவியையும் சைபர் குற்றவாளிகள் 'டிஜிட்டல் கைது' நாடகமாடி மிரட்டி, அவர்களது சேமிப்பிலிருந்து ரூ. 50.5 லட்சம் பணத்தை மோசடி செய்துள்ளனர்.
 
நாசிக் காவல்துறை மற்றும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் போல் பேசிய மோசடி கும்பல், அந்த மூத்த குடிமகன் பணமோசடி வழக்கில் சிக்கியுள்ளதாகக் கூறி, போலி FIR-ஐ காட்டி மிரட்டியுள்ளது. விசாரணையின் பெயரால், தம்பதியினரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வீடியோ காலிலேயே இருக்குமாறு உத்தரவிட்டு, உளவியல் ரீதியாக தனிமைப்படுத்தியுள்ளனர்.
 
இந்த கட்டாய கண்காணிப்பின்போது, பணத்தை 'சரிபார்க்க' வேண்டும் என்று கூறி, அவர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை பெற்று, ரூ. 50.5 லட்சத்தை ஒரு போலி கணக்கிற்கு மாற்ற செய்துள்ளனர். பணம் கிடைத்ததும் அழைப்புகள் துண்டிக்கப்பட்டன.
 
சைபர் காவல்துறை நடத்திய விசாரணையில், மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட வங்கி கணக்குகளை' வாடகைக்கு விட்ட ரவி ஆனந்த அம்போரே மற்றும் விஸ்வபால் சந்திரகாந்த் ஜாதவ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
 
இந்நிலையில் எந்தக் காவல்துறை அதிகாரியும் பணத்தை கேட்க மாட்டார் அல்லது வீடியோ கண்காணிப்பில் வைக்க மாட்டார் என்றும், சந்தேகத்திற்கிடமான அழைப்புகளை 1930 என்ற எண்ணில் புகாரளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு!

வங்கக் கடலில் மீண்டும் காற்றழுத்தத் தாழ்வு நிலை.. புயல் எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்..!

திடீரென வெறி பிடித்த தெருநாய்.. குழந்தைகள், முதியவர்கள் என 10 பேரை கடித்ததால் அதிர்ச்சி..!

SIR நடவடிக்கையின் அதிர்ச்சியில் உயிரிழந்தாரா 60 வயது பெண்.. பிண அரசியல் என பாஜக விமர்சனம்..!

காதலி, மனைவி இருவரையும் கொன்று ஒரே இடத்தில் புதைத்த கொடூரன்.. அதிர்ச்சி சம்பவம்..

அடுத்த கட்டுரையில்
Show comments