எனது எம்பி பதவிக்காலம் தான் முடிந்தது. ஆனால் அரசியல், சமூக பணிக்காலம் முடியவில்லை என முக்தார் அப்பாஸ் நக்வி பேட்டி.
மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி மாநிலங்களவை உறுப்பினராக இருந்த நிலையில் அவருடைய பதவியை நிறைவடைகிறது. ஒரு மத்திய அமைச்சர் மக்களவை அல்லது மாநிலங்களவையில் கண்டிப்பாக எம்பியாக இருக்க வேண்டும் என்ற நிலையில் அவரது மாநிலங்களவை பதவி முடிவடைவதால் அவர் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
மேலும் அவர் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று கூறப்பட்டு வருகிறது. எனவே மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி ராஜினாமா செய்தார் என பேச்சுக்களும் எழுந்தது.
இந்நிலையில் அவர் கூறியதாவது, எனது எம்பி பதவிக்காலம் தான் முடிந்தது. ஆனால் அரசியல், சமூக பணிக்காலம் முடியவில்லை என முக்தார் அப்பாஸ் நக்வி பேட்டியளித்தார்.