Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூடா முறைகேடு வழக்கு.! சித்தராமையா முதல்வர் பதவி தப்புமா.? கர்நாடக நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

Senthil Velan
செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (12:52 IST)
மூடா முறைகேடு விவகாரத்தில் விசாரணைக்கு தடை கோரிய சித்தராமையாவின் ரிட் மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 
 
கர்நாடக மாநிலம் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் சார்பில் மைசூருவில் முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு முந்தைய பாஜக ஆட்சியில் கடந்த 2021-ம் ஆண்டு 14 வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டன. இதில் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இது தொடர்பாக முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி வழங்க கோரி சமூக ஆர்வலர்கள் ஆளுநருக்கு மனு கொடுத்தனர். இதற்கு ஆளுநர் அனுமதி வழங்கிய நிலையில், ஆளுநரின் உத்தரவை ரத்து செய்யக்கோரி முதலமைச்சர் சித்தராமையா கடந்த மாதம் 19-ந் தேதி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 
 
அந்த மனு மீது விரிவான விசாரணை நடைபெற்றது.  கடந்த 12-ந் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் கர்நாடகா உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.


ALSO READ: பாலியல் வழக்கு - மலையாள நடிகர் சித்திக் முன்ஜாமின் மனு தள்ளுபடி.!!


மூடா முறைகேடு விவகாரத்தில் விசாரணைக்கு தடை கோரிய சித்தராமையாவின் ரிட் மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை விசாரிக்க தடை இல்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் சித்தராமையாவின் முதல்வர் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் வழக்கு - மலையாள நடிகர் சித்திக் முன்ஜாமின் மனு தள்ளுபடி.!!

பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பதாக தகவல்.. தமிழகத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

துரை தயாநிதி டிஸ்சார்ஜ்.. புகைப்படம் எடுத்த பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்..!

இந்தியாவில் முதல்முறையாக 3 விமான நிலையங்களை இணைக்கும் ரயில்.. 2027ல் முடிக்க திட்டம்..!

செவ்வாய் கிரகத்துக்கு ஆளில்லா விண்கலன்: எலான் மஸ்கின் சூப்பர் திட்டம்

அடுத்த கட்டுரையில்