Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மிஸ்டர் அண்ட் மிஸ் தமிழ்நாடு 2023 போட்டி! – பட்டத்தை தட்டி சென்றவர்கள்!

Advertiesment
Ms Tamilnadu
, திங்கள், 27 நவம்பர் 2023 (16:08 IST)
கோவாவில் இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நடத்திய மிஸ்டர் அண்ட் மிஸ் தமிழகம் 2023 போட்டியில் கார்த்திகேயன் ராஜா மற்றும் சுப்ரியா ஆகியோர் பட்டத்தை வென்றனர்.


 
இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நடத்திய மிஸ்டர் அண்ட் மிஸ் தமிழகம் 2023 நிகழ்ச்சி மிகப்பிரமாண்டமாக கோவாவில் பிக்  டாடி எனும் சொகுசு கப்பலில் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றனர்.

இதில் மிஸ்டர் தமிழகம் 2023 பட்டத்தை கார்த்திகேயன் ராஜா கைப்பற்றினார். 2 வது இடத்தை விஜேஷ் மற்றும் 3 வது இடத்தை பாலகுமார் ஆகியோரும்  வென்றனர். மிஸ் தமிழகம் 2023 பட்டத்தை சுப்ரியா கைப்பற்றினார். 2 வது மற்றும் 3 வது  இடங்களை சூரிநெட்டி அனுஷா மற்றும் மஹன்யா ஆகியோர் வென்றனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு நடிகைகள் ஜனனி, ஆஷ்னா சவேரி, சஞ்சிதா ஷெட்டி, ரம்யா சுப்பிரமணியன் நடிகர் விஸ்வநாத் உத்தப்பா, Big Bull அர்விந்த் உள்ளிட்டோர் கிரீடம் அணிவித்தனர்.

webdunia

 
நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக,   ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக  பொள்ளாச்சியில் செயல்படும் நியூ பிரிட்ஜ் மையத்திற்கு ஒரு லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் உரையாற்றிய இந்தியன் மீடியா ஒர்க்ஸின், ஜான் அமலன், புதிய முகங்களை நாட்டிற்கு அறிமுகப்படுத்துவதே தங்கள் நோக்கம் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பங்குபெறுவதன் மூலம் ஃபேஷன் துறையின் புதிய வாய்ப்புகளை பெற முடியும் எனவும், இந்நாட்டின் புதிய நட்சத்திரங்களை இந்த போட்டி உருவாக்கும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

இந்தியன் மீடியா ஒர்க்ஸின் 3 வது மிஸ்டர் அண்ட் மிஸ் தமிழகம் 2023 இதுவரை இல்லாத வகையில் பிரமாண்டமாக கோவாவில் பிக்  டாடி எனும் சொகுசு கப்பலில் நடத்தப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனியார் ஓட்டலில் வாங்கிய உணவில் கரப்பான்பூச்சி