பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா குஜராத்தில் இருந்து மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட உள்ளார்.
15 மாநிலங்களில் காலியாகும் 56 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுதாக்கல் செய்ய நாளையுடன் கடைசி நாளாகும்.
இந்நிலையில் மாநிலங்களவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதன்படி குஜராத்திலிருந்து மாநிலங்களவைக்கு பாஜக தலைவர் தலைவர் ஜே.பி நட்டா போட்டியிடுகிறார்.
அதே போல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த அசோக் சவானுக்கு மாநிலங்களவை எம்பி சீட் வழங்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து அவர் போட்டியிடுகிறார்.
மத்திய பிரதேச மாநிலங்களவை பதவிக்கான வேட்பாளராக மத்திய இணை அமைச்சர் எல். முருகனை பாஜக அறிவித்துள்ளது.
ஒடிசா மாநிலத்துக்கான மாநிலங்களவை பதவிக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் போட்டியிடுகிறார்.