Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கர்ப்பிணி பெண்களுக்கு மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ்

கர்ப்பிணி பெண்களுக்கு மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ்

Advertiesment
கர்ப்பிணி பெண்கள்
, செவ்வாய், 9 ஆகஸ்ட் 2016 (11:51 IST)
மலைவாழ் பழங்குடி கர்ப்பிணி பெண்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


 

 
சத்தீஸ்கார் மாநிலத்தில் உள்ள சில மலை கிராமங்கள் இன்னும் வெளி உலகுடன் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளன. அதுபோன்ற கிராமங்களில் வாழும் மக்கள் மருத்துவமனைக்கு பல கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும்.
 
அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் உடன் தொடர்பு கொண்டு நோயாளிகளை அழைத்து செல்வதற்கு கால தாமதம் ஏற்படுகிறது. கர்ப்பிணி பெண்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். அதனால் மாநில சுகாதாரத்துறை அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
 
இதன்மூலம் கர்ப்பிணி பெண்களை குறுகிய மலைப்பாதைகளில் விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியும். இத்திட்டத்தால் 200க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் பயன் அடைந்துள்ளனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடைமேடையிலிருந்து ரயில் மீது குதித்த வாலிபர் உடல் கருகி பலி