Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அழுகையை நிறுத்தாத குழந்தை – ஆத்திரத்தில் தாய் செய்த கொடூரம் !

Advertiesment
அழுகையை நிறுத்தாத குழந்தை – ஆத்திரத்தில் தாய் செய்த கொடூரம் !
, வியாழன், 20 பிப்ரவரி 2020 (10:23 IST)
கோப்புப் படம்

தனது குழந்தை ஓயாமல் அழுது கொண்டு இருந்ததால் அதனை பாறையின் மீது கொலை செய்துள்ளார் ஒரு கொடூர தாய்.

கேரளா மாநிலத்தில் உள்ள கண்ணூர் எனும் பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் சரண்யா மற்றும் பிரனவ். இவர்களுக்கு ஒன்றரை வயதில் வியான் என்றொரு மகன் உள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் நள்ளிரவில் தங்கள் குழந்தையைக் காணவில்லை என இருவரும் புகார் அளித்துள்ளனர்.

இது சமம்ந்தமாக காவல்துறை விசாரணை நடத்த குழந்தையின் தாயான  சரண்யா மீது அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் குழந்தையின் சடலம் அவர்கள் வீட்டுக்கு அருகே உள்ள கடற்கரையில் கிடைத்துள்ளது. இது சம்மந்தமாக நடந்த விசாரணையில் குழந்தையின் சரண்யா முன்னுக்குப் பின் முரனான பதிலை சொல்லியுள்ளார்.
webdunia
சரண்யா மற்றும் அவரது மகன் வியான்

அவர் சமம்ந்தமான பொருட்களை சோதனை செய்துள்ளனர். அதில் அவர் போர்வையில் கடல் மண் துகள்கள் இருந்ததால் அவரை விசாரித்துள்ளனர். அப்போது குழந்தையை நாந்தான் கொலை செய்தேன் என்பதை அவர் ஒத்துக் கொண்டுள்ளார். மேலும் விசாரணையில் ‘நள்ளிரவில் குழந்தை அழுதுகொண்டே இருந்தான். அவனைக் கடற்கரைக்கு அழைத்துச் சென்றேன். ஆனாலும் அவன் அழுகையை நிறுத்தாத ஆத்திரத்தில் பாறையில் மோதி கடலில் வீசிவிட்டேன். அதன் பின்னர் வீட்டுக்கு வந்து சாதாரணமாக படுத்துக் கொண்டேன்’ எனக் கூறியுள்ளார்.  இந்த சம்பவமானது கேரளாவில் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆட்சியை பிடிக்க முஸ்லீம்களை தூண்டி விடுகிறது திமுக – பொன்னார் குற்றச்சாட்டு