Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முட்டாள்தனமான காரியத்தை சூப்பர் ஸ்டார் செய்ய மாட்டார்: எதிர்க்கட்சித் தலைவர் கருத்து

Advertiesment
முட்டாள்தனமான காரியத்தை சூப்பர் ஸ்டார் செய்ய மாட்டார்: எதிர்க்கட்சித் தலைவர் கருத்து
, வெள்ளி, 7 செப்டம்பர் 2018 (06:48 IST)
சமீபத்தில் பிரதமர் நரேந்திரமோடியை மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் சந்தித்த நிலையில் அவர் விரைவில் பாஜகவில் இணைவார் என்றும் கேரளாவில் பாஜகவை வலுப்படுத்துவார் என்றும், திருவனந்தபுரம் தொகுதியில் வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றது.

இந்த நிலையில் இதுகுறித்து கருத்து கூறிய கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா கூறியபோது,  'சூப்பர் ஸ்டாரும் நடிகருமான மோகன்லால் பா.ஜ.கவில் இணையும் முட்டாள்தனமான காரியத்தை செய்ய மாட்டார் என நான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

 
webdunia
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: மோகன்லால் பல்வேறு மக்களாலும் ரசிக்கப்படும் ஒரு நடிகர். அவர் கேரள மக்களிடையே நல்ல பிரபலமானவர். சமூகத்தால் மதிக்கப்படுபவர். அவர் பா.ஜ.கவில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது போன்ற முட்டாள்தனமான தவற்றை செய்யமாட்டார் என நான் நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார். இதேபோல் பல அரசியல்வாதிகள் மோகன்லால் பாஜகவில் இணைவது குறித்து கடும் விமர்சனம் செய்து வருகின்றனர். இருப்பினும் பாஜகவில் மோகன்லால் இணைய அதிக வாய்ப்பு இருப்பதாக கேரள அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓவரா பேசிய அதிமுக பிரமுகர் - பொளந்துகட்டிய போலீஸ்