பிரதமர் மோடி இந்திய ஹாக்கி அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தியா மற்றும் பிரிட்டன் மகளிர் கால்பந்து அணிகளுக்கு இடையே இன்று ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இந்நிலையில் பிரதமர் மோடி இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் பதிவிட்டுள்ளதாவது, டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மகளிர் ஹாக்கி போட்டியில் நூலிழையில் பதக்கத்தை தவறவிட்டோம். இந்திய மகளிர் ஹாக்கி அணி குறித்து பெருமைப்படுகிறோம். டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இந்திய மகளிர் ஹாக்கி அணி சிறப்பாக விளையாடியது எப்போதும் நினைவில் இருக்கும் என கூறியுள்ளார்.