கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சந்தித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பிரதமர் மோடி.
சுற்று பயணம் மேற்கொள்வதற்காக கடந்த 17 ஆம் தேதி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இந்தியாவுக்கு வந்திருந்தார். இவரை பிரதமர் மோடி சந்திக்காததால் பெரும் சர்சை எழுந்தது.
இந்நிலையில் சுற்றுப்பயணத்தின் இறுதிநாளான இன்று டெல்லியில் பிரதமரை சந்திக்கச் காரில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வந்த கனடா பிரதமரை மோடி நேரில் சென்று வரவேற்று, சர்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். மேலும் இன்று கனடா பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இது குறித்து பிரதமர் மோடி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சந்தித்து பேசுவதில் மிகவும் ஆர்வமாக உள்ளேன். இந்தியா - கனடா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக ட்ரூடோவுடன் பேச உள்ளேன். நமது இருநாடுகளுக்கு இடையேயான உறவுக்கு அவர் அளிக்கும் ஆழமான அர்ப்பணிப்பை நான் பாராட்டுகிறேன்” என பதிவிட்டிருந்தார்.