Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மோடியின் பதவி பறிக்கப்பட வேண்டும்- பிரசாந்த் பூஷன்

modi

Sinoj

, செவ்வாய், 19 மார்ச் 2024 (19:20 IST)
18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாகவும், பதிவான வாக்குகள் வரும் ஜீன் 4 ஆம் தேதி எண்ணப்பட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்தார். எனவே நாடு முழுவதும் கடந்த சனிக்கிழமை முதல் தேர்தல் விதிகள் அமல்படுத்தப்பட்டது.
 
இதனால் அனைத்து கட்சிகளுக்கும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில்,  பிரதமர் மோடி இந்திய விமானப்படை ஹெலிகாப்டரில் வந்து பிரசாரம் செய்த நிலையில், அவர் பதவி பறிக்கப்பட வேண்டும் என்று  பிரஷாந்த் பூசன் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து  பிரசாந்த்  பூசன் தெரிவித்துள்ளதாவது:
 
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த நிலையில், ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்திற்காக இந்திய விமானப்படை விமானத்தில் பிரதமர் மோடி வந்தார். 
 
விமானப்படை ஹெலிகாப்டர்களை பயன்படுத்தியதற்காக இந்தியா காந்தியின் பதவியை அலகாபாத் நீதிமன்றம் கடந்த 1975 ஆம் ஆண்டு பறித்தது. ஆனால், அது அந்தக் காலம். இன்று பிரதமர் மோடியோ அரசாங்கப் பணம், அரசாங்க அமைப்புகள், அரசாங்க அதிகாரிகள் என அரசாங்கத்தின் சகலத்தையும் தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
 
பிரதமர் மோடி ராணுவ ஹெலிகாப்டர் பயன்படுத்திய விவகாரத்தில்  விமானப்படைக்கு பாஜக பணம் செலுத்தியதா? ராணுவ ஹெலிகாப்டர்களை வாடகைக்கு எடுக்க முடியுமா? என்பதை தேர்தல் ஆணையம் தெரிவிக்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராணுவ ஹெலிகாப்டர்களை வாடகைக்கு எடுக்க முடியுமா? திணாமுல் காங்., எம்பி கேள்வி