Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமைச்சர் உதயநிதிக்கு உரிய பதிலடி தர வேண்டும்: அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மோடி

PM Modi
, புதன், 6 செப்டம்பர் 2023 (17:49 IST)
சனாதனம் குறித்து தவறாக பேசிய அமைச்சர் உதயநிதிக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாடிய போது கூறியதாக செய்தி வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர்  சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டு சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியது இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
 
இந்த நிலையில் ஏற்கனவே உதயநிதி பேசியதை இண்டியா கூட்டணியில் உள்ள சில தலைவர்களே கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தற்போது பிரதமர் மோடி இது குறித்து மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பேசி உள்ளார். 
 
உதயநிதியின் சனாதன கருத்து குறித்து பதிலடி கொடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர்களுக்கு அவர் அறிவுரை கூறியுள்ளார். எந்த மதத்தையும் தவறாக பேசக்கூடாது என்றும் சனாதன தர்மத்தை யாராவது தவறாக பேசினால் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் அவர் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கழுத்தில் டாட்டூ குத்தி கொண்ட 22 வயது இளைஞர் பரிதாப மரணம்.. குடும்பத்தினர் அதிர்ச்சி..!