பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களுக்கு பல கராரான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
டெல்லியில் நடந்த மத்திய மந்திரி சபை கூட்டத்தில் பிரதமர் மோடி பல கடுமையான உத்தரவுகளை அமைச்சர்களுக்கு பிறப்பித்தார். அதன் படி, மத்திய அமைச்சர்கள் தங்களது உறவினர்களை அரசு பணியில் அமர்த்த கூடாது எனவும், அமைச்சர்கள் தினமும் அலுவலகத்திற்கு காலை 09.30 மணிக்குள் வர வேண்டும், இதனை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, அம்மாநிலத்தில் பல முன்னேற்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டும் எனவும், அதற்காக நாம் பாடுபட வேண்டும் எனவும் மோடி தெரிவித்துள்ளது கூறிப்பிடத்தக்கது.
ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகிய பகுதிகள் யூனியன் பிரதேசங்களாக அறிவித்த பிறகு அந்த பகுதிகளுக்கான சிறப்பு திட்டங்களையும் வகுக்கவேண்டும் என பாஜக அரசு தீவிர பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.