Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்ணீர் விட்டு அழுத இஸ்ரோ தலைவர்: ஆறுதல் கூறிய மோடி

Webdunia
சனி, 7 செப்டம்பர் 2019 (09:22 IST)
சந்திரயான் 2 விக்ரம் லேண்டர் தொடர்பை இழந்த நிலையில், கண்ணீர் விட்டு அழுத இஸ்ரோ சிவனுக்கு மோடி ஆறுதல் கூறினார்.

நிலவுக்கு அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், நிலவின் தரைதளத்தை தொடும்போது அதன் தொடர்பை இழந்தது. இதை தொடர்ந்து பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுபாட்டு அறையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது தாய் நாட்டுக்காக வாழ்கின்ற இஸ்ரோ விஞ்ஞானிகளை பார்த்து நாடே பெருமை கொள்கிறது. நமது தாய்நாட்டிற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் தூக்கமின்றி உழைத்து வருகின்றனர். கடைசி வரை சந்திரயான் 2 வுக்காக உழைத்ததற்கு நன்றி” என தனது நன்றிகளை தெரிவித்தார்.


அதன் பின்பு, ”கடைசி நிமிட பின்னடைவு நிரந்தரமல்ல, நமது விண்வெளி திட்டம் குறித்து ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ளவேண்டும், நாட்டின் வளர்ச்சிக்காக நம்ப முடியாத அளவுக்கு பணியாற்றியுள்ளீர்கள். இது வரை யாரும் முயற்சிக்காததை நீங்கள் முயற்சி செய்துள்ளீர்கள், நமது விண்வெளி திட்டத்தில் இனிதான் பல உச்சங்கள் வரவுள்ளன. நானும் நாடும் உங்களுடனே இருப்போம்” எனவும் ஆறுதல் கூறினார்.

பிரதமர் மோடி உரையாற்றியபோது இஸ்ரோவின் பெண் விஞ்ஞானிகள் கண்ணீர் விட்டு அழுதனர். பிரதமர் மோடி உரையாற்றிவிட்டு திரும்பிய போது, இஸ்ரோ தலைவர் சிவன் மோடியிடம் கண்ணீர் விட்டு அழுதார். பிரதமர் மோடி சிவனை கட்டி தழுவி சிறுது நேரம் முதுகில் தடவி கொடுத்து ஆறுதல் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments