தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் உலகின் 90 நாடுகளில் பரவி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவிலும் ஒமிக்ரான் வைரஸ் பரவிய நிலையில் தற்போது அது மிக வேகமாக பரவி வருவதாகவும் 200க்கும் அதிகமானோர் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. 
	 
	அதிகபட்சமாக டெல்லி மும்பை ஆகிய மாநிலங்களிலும் ராஜஸ்தான் குஜராத் தமிழகம் கர்நாடகம் கேரளா உள்பட சில மாநிலங்களில் மெதுவாகவும் பரவி வருகிறது
	 
	இந்த நிலையில் நாடு முழுவதும் ஒமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்த பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை செய்ய உள்ளார். சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை செய்து அதன்பின் மாநிலங்களுக்குத் தேவையான அறிவுறுத்தல்களை அவர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது