Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரக உள்ளாட்சி தேர்தல்: பாஜகவினருக்கு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து

Webdunia
புதன், 20 அக்டோபர் 2021 (09:12 IST)
தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பாஜகவினருக்கு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்து பதிவு. 

 
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிவுகளும் வெளியானது. இந்த தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் திமுக வெற்றி பெற்றது. அதிமுக இரண்டாவது இடத்திலும், காங்கிரஸ் மூன்றாவது இடத்திலும் உள்ளது. 
 
இந்நிலையில் இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு போட்டியின்றி மற்றும் போட்டி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் இன்று காலை 10 மணிக்கு பதவியேற்றுக்கொள்கின்றனர்.  
 
இதனிடையே தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பாஜகவினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பாஜக மீது நம்பிக்கை வைத்த தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளுக்கு நன்றி. அருமையான தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உழைப்போம் என்று தமிழில் பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments