Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களுக்கு தலை வணங்குகிறேன்: பிரதமர் மோடி!

மக்களுக்கு தலை வணங்குகிறேன்: பிரதமர் மோடி!

Webdunia
திங்கள், 18 டிசம்பர் 2017 (17:16 IST)
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சியமைக்க உள்ளது. இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி பாஜக மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்காக குஜராத் மற்றும் இமாச்சலபிரதேசம் மக்களுக்கு தலை வணங்குகிறேன் என கூறியுள்ளார்.
 
குஜராத் மற்றும் இமாச்சலபிரதேச மாநில சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றிவாகை சூடியுள்ளது. குஜராத்தில் 99 தொகுதிகளிலும், இமாச்சலபிரதேசத்தில் 44 தொகுதிகளிலும் பாஜக முன்னிலையில் உள்ளது. இரு மாநிலங்களிலும் பாஜகவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
 
இந்நிலையில் பாஜக மீது வைத்திருக்கும் அன்பு மற்றும் நம்பிக்கைக்காக குஜராத் மற்றும் இமாச்சலபிரதேச மக்களுக்கு தலை வணங்குகிறேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார். நல்லாட்சிக்கு பலத்த ஆதரவு கிடைத்துள்ளதைதான் இந்த இருமாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது. இந்த மாநிலங்களின் வளர்ச்சிப்பாதையை மீண்டும் விரிவுப்படுத்த சளைக்காமல் உழைப்போம் என்று உறுதியளிக்கிறேன் என அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் முதலாளி ஒரு பொய்ப்புழுகி..! எலான் மஸ்க் பற்றி குறை சொன்ன Grok AI!

சுற்றுலா சீசன் வந்தாச்சு.. குழந்தைகளுக்கு சுற்றுலாவை மேலும் சுவாரஸ்யமாக்க சில Activities!

லண்டன் செல்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.. முக்கிய வர்த்தக பேச்சுவார்த்தை..!

ஏப்ரல் 6ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தில் மீண்டும் ஒரு என்கவுண்டர்.. மதுரையில் பிரபல ரவுடி சுட்டுக்கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments