Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீன ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளை கேட்டு வாங்குவாரா மோடி? - கபில் சிபல் கேள்வி

Webdunia
வெள்ளி, 11 அக்டோபர் 2019 (14:33 IST)
சீன அதிபரும், பிரதமர் மோடியும் சந்தித்துக் கொள்ளும் இரண்டாவது உச்சி மாநாட்டில் சீன ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகள் குறித்து பேசப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.

சீன அதிபர் ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திரமோடி சந்தித்து கொள்ளும் இரண்டாவது உச்சி மாநாடு இன்று மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இதற்காக காலையிலேயே பிரதமர் தமிழகம் வந்தடைந்தார். சீன அதிபர் ஜின்பிங் தனது பாதுகாப்புத்துறை அதிகாரிகளோடு சற்றுமுன் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கினார். அவருக்கு அங்கு கோலாகலமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று மாலை மாமல்லபுரம் செல்லும் சீன அதிபர் அங்குள்ள பழங்கால சிற்பங்கள் முதலியவற்றை பார்வையிடுகிறார். பிறகு பிரதமர் மோடியும், அதிபர் சின்பிங்கும் பேச்சு வார்த்தை நடத்த இருக்கிறார்கள். இரு நாடுகளுக்கிடையேயான உறவு நிலை குறித்த பல்வேறு முடிவுகள் அங்கே விவாதிக்கப்பட இருக்கின்றன.

விவாதத்தில் சீன ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீர் பகுதிகள் குறித்து பிரதமர் பேச வேண்டும் என கபில் சிபல் வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தானை காஷ்மீரிலிருந்து முற்றிலுமாக விலக்கிய இந்தியா, சீனாவிடம் இருந்தும் நிலப்பகுதிகளை திரும்ப பெற பேச்சு வார்த்தை நடத்தப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments