Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முப்படை தளபதிகள் குழுவிற்கு தற்காலிக தலைவர் நியமனம்! – மத்திய அரசு அறிவிப்பு!

Advertiesment
முப்படை தளபதிகள் குழுவிற்கு தற்காலிக தலைவர் நியமனம்! – மத்திய அரசு அறிவிப்பு!
, வியாழன், 16 டிசம்பர் 2021 (09:26 IST)
இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மறைந்த நிலையில் முப்படை தளபதிகள் குழுவிற்கு தற்காலிக தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

குன்னூரில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவத்தின் முப்படைகளின் தலைமை தளபதியான பிபின் ராவத் உள்பட 14 பேர் உயிரிழந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்களது உடல்கள் ராணுவ மரியாதையோடு இறுதி சடங்குகள் செய்யப்பட்டன.

இந்நிலையில் இந்திய முப்படைகளில் அடுத்த தலைமை தளபதி யார் என்ற கேள்வி நிலவி வந்தது. இந்நிலையில் தற்போது இந்திய முப்படைகளின் தளபதி குழுவிற்கு தலைவராக ராணுவ தளபதி எம்.எம்.நரவானே நியமிக்கப்பட்டுள்ளார். முப்படை தளபதிகளில் மூத்தவர் என்ற அடிப்படையில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முப்படைகளின் தலைமை தளபதி பதவிக்கு நபர் நியமிக்கப்படும் வரை தற்காலிகமாக இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் கைது செய்யப்பட்ட மாரிதாஸ்! – நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்!